அதர்வாவின் ‘100’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் பிரபல தயாரிப்பாளர்…

தமிழ் சினிமாவில் கடந்த சுமார் ஐந்தாண்டு காலமாக தமிழ் சினிமாவில் பல படங்களை விநியோகம் செய்து வந்தவர்கள் தான் இந்த ‘ஆரா சினிமாஸ்’. இந்த திரைப்பட விநியோக தொழிலில் இவர்கள் பல படங்களை வெளியீட்டத்தில் பல படங்கள் நல்ல லாபத்தையும், ஒரு சில படங்கள் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிறுவனம் கடைசியாக விநியோகம் செய்த திரைப்படம், ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி அய்யர் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளிவந்த ‘பாலூன்’ ஆகும். சில வியாபார சிக்கல்களால், இந்த நிறுவனம் பிறகு எந்த ஒரு திரைப்படத்தையும் விநியோகம் செய்யாமல் நிறுத்தியது.

திரைப்பட விநியோகத்தை நிறுத்திய ‘ஆரா சினிமாஸ்’, நிறுவனம் திரைப்படங்களை தயாரிப்பது என்று 2018ம் ஆண்டு முடிவெடுத்து, 100, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, ரங்கா, காதலிக்க யாருமில்லை, ஜங்கிள், சிபிராஜின் ரேஞ்சர்(டைகர்) திரைப்படம் அனா தொடர்ச்சியாக பல படங்களை தயாரிக்க ஆரம்பித்தனர். இதில் 100, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, ரங்கா ஆகிய படங்கள் முற்றிலும் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள்ளன. இந்த மூன்று படங்களில் 100 வரும் செவாய்க்கிழமை திரைப்பட தணிக்கை செயப்பட போவதாகவும், வரும் மே 3 அன்று வெளியிட போவதாகவும் சொல்லப்படுகிறது.

என்னடா தலைப்புக்கும் இந்த செய்திக்கும் சம்மந்தமே இல்லாம இருக்குதே என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகிறது. இப்போது விஷயத்திற்கு வருவோம்…

‘ஆரா சினிமாஸ்’ தயாரிப்பில் மே 3 அன்று வெளிவரவிருக்கும் அந்த படத்தில் மகேஷ் கோவிந்தராஜ் என்பவர் வில்லனாக அறிமுகமாகிறார். யார் அந்த மகேஷ் கோவிந்தராஜ் என்று தானே குழம்புகிறீர்கள்!
இந்த மகேஷ் தான் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி(CEO) ஆவார்.

இப்படம் மட்டுமின்றி, ‘ஆரா சினிமாஸ்’ தயாரிக்கும் வேறு ஒரு புதிய படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க கூடும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் கார்த்திகேயா நடித்து வெளிவந்த RX 100 திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் தமிழுக்கான ரீமேக் உரிமையை ‘ஆரா சினிமாஸ்’ தான் வாங்கியுள்ளது என்பது ஒரு கொசுறு செய்தி. ஆகையால், மகேஷ் இந்த RX 100 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தமிழ் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் மகேஷுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Response