வெறப்பான போலீஸாக அதர்வா : வெளியானது “100” படத்தின் ட்ரைலர்..!

நடிகர் அதர்வா நடிப்பில் உருவான “100” படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது!!

டார்லிங் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன். இவர் இயக்கிய முதல் படத்திற்கே பெரிய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி அடையாததால் தன்னிடைய அடுத்த படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சாம் ஆண்டன்.

இப்போது சாம் ஆண்டன் 100 என்ற திரில்லர் படத்தை இயக்கியுள்ளார். அதர்வா இந்த படத்தில் வெறப்பான போலீஸாக நடித்திருக்கிறார், அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். ஆரோ சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விக்ரம் வேதா, புரியாத புதிர் போன்ற படங்களுக்கு இசையமைத்த சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், அதர்வா நடித்த “100” படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

Leave a Response