காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கர்நாடகா பேருந்து….

bus (1)
கர்நாடகா மாவட்டத்தில் வடக்கு பகுதியில் உள்ள கடாக் மாவட்டத்தில் இன்று பலத்த மழை பெய்துள்ளது. அதனால் அங்கு காட்டாற்று வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதில் லக்ஷ்மேஸ்வரிளிருந்து டொட்டூரூ சென்று கொண்டிருந்த பேருந்து அந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கவிழ தொடங்கியது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் அனைவரும் அப்பேருந்தில் உள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அது மட்டுமல்லாது மீட்பு குழுவினர்க்கும் தகவல் அளித்துள்ளனர். மேலும் கவிழ்ந்த பேருந்தை அரகில் உள்ள மரத்தில் ஒரு கனமான கையிற்றால் கட்டி விட்டு பேருந்தின் அவசர கால கதவு வழியாக பயணிகளை காப்பாற்றினார்.

மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்ப்பட்டு வரும் நிலையில் கடந்த ஒரு வாரமாக அவ்வபோது பெங்களுரு உட்பட, கர்நாடகாவிலும் சில மாவட்டங்களில் சிறு சிறு மழை பெய்துவருவது அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் அளித்து வரகிறது.

Leave a Response