மே 15 ல் வேலை நிறுத்தம்…

bus-strike-004
அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி வரும் 15-ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தமிழக அரசுக்கும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையே கடந்த மாதம் நடைபெற்ற மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. இதனைத் தொடர்ந்து வரும் 15-ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் சார்பாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கும் பொருட்டு, தமிழக அரசின் சார்பில் நான்காம் கட்ட பேச்சுவார்த்தைக்காக தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையில், தமிழக அரசின் சார்பில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார்.

ஆனால் தற்போது உள்ள சூழலில் போக்குவரத்து ஊழியர்களுக்கு 2500 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 15-ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response