நீதிபதி கர்ணனை கைது செய்வதில் தீவிரம்…

karanan
கடந்த சில நாட்கள் முன்பு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவின் பெயரில் நீதிபதி கர்ணனை கைது செய்ய முன் வந்த பொழுது அவர் விமானத்தில் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள். இவரை தேடி சென்னை சென்று உள்ளனர். இதனை விவரமாக கிழே உள்ள பத்தியில் பாப்போம்.

அதாவது உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் நீதிபதி கர்ணன் சென்னை வந்தடைந்தார். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கொல்கத்தா காவல்துறையினர் நேற்று 10.05.17 அன்று சென்னை வந்தடைந்தனர். ஆனால் நீதிபதி கர்ணன் சென்னையில் இருந்து 120 கிமீ தொலைவில் அமைந்துள்ள காளஹஸ்திக்கு சென்றுள்ளார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தமிழக காவல்துறையினருடன் ஆலோசனை நடத்திய கொல்கத்தா காவல்துறையினர் மாலை காளஹஸ்திக்கு விரைந்தனர். ஆனால் அங்கு சென்ற போதும் நீதிபதி கர்ணன் அங்கு இல்லை என்பதால் அவரை கைது செய்யமுடியவில்லை. சென்னை மற்றும் கொல்கத்தா காவல்துறையுடன் ஆந்திரபிரதேச காவல்துறையும் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆந்திர காவல்துறையினர் நெல்லூர் மாவட்டம் தடா மற்றும் சூலூர்பேட்டையில் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால் ஆந்திர காவல்துறையினராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆந்திரா – தமிழ்நாடு எல்லையில் நீதிபதி கர்ணனின் தொலைபேசி சிக்னல் இருந்ததாகவும் அதன் பின்னர் அவருடைய இரண்டு மொபைல் போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தமிழக காவல்துறை அவரது மகன் வீடு அமைந்திருக்கும் சூளைமேடு பகுதிக்கும் அவரது சொந்த ஊரான கடலூருக்கும் தனிக்குழுக்களை அனுப்பியுள்ளது. மூன்று மாநில காவல்துறையும் சேர்ந்து தேடியும் நீதிபதி கர்ணனை இன்னும் கைது செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா காவல்துறையினர் தொடர்ந்து தமிழக காவல்துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Response