‘ஆகாச மிட்டாய்’ படப்பிடிப்பு நிறைவு..!

aagasa mittai
இப்போது தான் ஆரம்பித்ததுபோல இருக்கிறது, ஆனால் பரபரவென முடிவடைந்துவிட்டது ‘ஆகாச மிட்டாயி’ படத்தின் படப்பிடிப்பு. தமிழில் வெற்றிபெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படத்தின் அக்மார்க் மலையாள ரீமேக் தான் இந்த ‘ஆகாச மிட்டாயி’.

பொதுவாக தமிழில் இருந்து மலையாளத்தில் ஒரு படம் ரீமேக் ஆவது என்பது அபூர்வம். இதற்குமுன் சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள் படம் அந்த சாதனையை செய்திருந்தது. இப்போது அதே சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படத்திற்கு அந்த கெளரவம் கிடைத்துள்ளது.ஒரு நடிகராக மலையாள சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துவிட்ட சமுத்திரக்கனி, இந்த ‘ஆகாச மிட்டாயி’ படத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு படைப்பாளியாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

படத்தின் கதாநாயகனாக ஜெயராம் நடித்துள்ளார். கதாநாயகியாக ஒப்பந்தமான வரலட்சுமி பின்னர் இந்தப்படத்தில் இருந்து வெளியேறியதும், இனியா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த செய்தியை நடிகர் ஜெயராம் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Leave a Response