மிக அதிவேக இணைய சேவை ஐதராபாத்தில் தொடக்கம்!..

fastest_broadband
இந்தியாவில் முதன் முறையாக 1 ஜிபி மிக அதிவேக இணைய சேவை வழங்கும் திட்டம் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூரை அடிப்படையாக கொண்ட ஏசிடி பைபர்நெட் என்ற இணைய சேவை வழங்கும் நிறுவனம், நொடிக்கு 1ஜிபி என்ற அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

1ஜிபி வேக பிராட்பேண்ட் இணைய சேவையின் அடிப்படை விலை ரூ.5,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த தொகைக்கு 1 டிபி அளவுக்கு டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அதிவேக இணைய சேவையை நாட்டின் முக்கிய 10 நகரங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ஏசிடி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையை பெரும் முதல் நகரம் என்ற பெருமையை ஐதராபாத் பெற்றுள்ளது.

Leave a Response