மகா தீபத்திருவிழா இணையதளம் மூலம் பாஸ்: அமைச்சர் துவைக்கி வைத்தார்!

thiipam

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த தேரோட்டத்தில் முருகர் தேரை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வடம்பிடித்து தொடங்கி வத்தார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 2-ந்தேதி காலை பரணி தீபமும், மாலையில் மகாதீபம் ஏற்றபடுகிறது.

இந்த நிகழ்ச்சிகளின் போது கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது.

thiruvannaamalai

பரணி தீப நிகழ்ச்சியில் 500 பக்தர்களும் மகாதீப சிறப்பு பூஜைகளில் பங்கேற்க 1100 பேரும் கோவிலுக்குள் அனுமதிக்க பாஸ் தயார் செய்யபட்டுள்ளது.

உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பாஸ் பெறும் வகையில் இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

www.tntemple.orc மற்றும் www.arunachaleswarar temple.tnhrce.in என்ற இணையதளத்தில் ரூ.500, ரூ.600 கட்டண பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மகாதீபத்தன்று வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் செய்யபட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கலெக்டர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Response