புதுச்சேரியில் வெளுத்து வாங்கும் மழை!

pudhu1

வடகிழக்குப் பருவமழை மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியது. கடலோர மாவட்டங்களை மட்டுமல்ல தென் தமிழகத்திலும் மழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

pudhu

அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாள்கள் வெயில் அடித்த நிலையில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9.30 மணி முதல் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

 

இதனால் பள்ளிகள், அலுவலகங்களுக்கு சென்றவர்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். பரபரப்பான சாலைகளான அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி, புஸ்சி வீதி மறைமலையடிகள் சாலை, காமராஜர் சாலை போன்றவற்றில் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சென காணப்பட்டன.

Leave a Response