கிரானைட் குவாரிக்கும் ஆப்பு வைத்த ஐகோர்ட் கிளை !

graniteonemadurai

ஜல்லிக்கற்களுக்காக மட்டுமே குவாரிகளை நடத்தலாம். அதுவும் புவியியலாளர்களிடமிருந்து உரிய அனுமதியை பெற்ற பிறகே நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மணலுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கில் 6 மாதங்களுக்குள் தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதே உத்தரவில்தான் கிரானைட் தொடர்பான உத்தரவையும் ஹைகோர்ட் கிளை பிறப்பித்துள்ளது. இயற்கை வளத்தை பாழ்படுத்தும் மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளைகளுக்கு விழுந்த பலத்த அடியாக இந்த உத்தரவுகள் பார்க்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் படிப்படியாக மூட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்தது.

Leave a Response