ரிலையன்ஸ் ஜியோ குறைத்துள்ள வாலிடிட்டி நாட்கள்!

jio9456
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்த சலுகை கட்டணத்திற்கான கால அவகாசம் முடிவடைய உள்ளதால், கட்டணத்தை உயர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் ஜியோ அறிமுகப்படுத்த உள்ள குறைந்த விலை 4ஜி மொபைல் போன் விற்பனைக்கு வந்த பிறகு இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட உள்ளதாக யூ.பி.எஸ்., தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் கட்டண உயர்வு அறிவிப்பிற்கு பிறகு, அதற்கு தகுந்தாற் போல் தாங்களும் கட்டணங்களை உயர்த்தி, அதற்கு தகுந்த புதிய திட்டங்களை அறிவிக்க ஏர்டெல், வோடபோன், ஐடியா செல்லுலர் உள்ளிட்ட போட்டி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜியோ அறிமுகம் செய்ய உள்ள ரூ.500 4ஜி பியூச்சர் போன் மூலம் 2ஜி வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்களை 4ஜி க்கு மாற்றிக் கொள்ளலாம். ஜியோ அறிவிக்க உள்ள புதிய கட்டண உயர்வின்படி தினமும் ரூ.5.5 என்ற கட்டணத்தில் வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ.142 முதல் ரூ.284 வரை இருக்கும் திட்டத்தின் சலுகை கட்டணத்தை ரூ.309 திட்டமாக உயர்த்த உள்ளது. இதன் வாலிடிட்டி நாட்களை 56 நாட்களில் இருந்து 28 நாட்களாக குறைக்க உள்ளது.

அதாவது புதிய திட்டத்தின்படி ரூ.309 திட்டத்தின் கீழ் 28 நாட்களுக்கு ரூ.28 ஜிபி சேவை வழங்கப்படும்.

Leave a Response