ராஜா ராணி இது 2013ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அட்லீ குமார் எழுதி, இயக்கியுள்ளார். அப்படம் அவருக்கு பெரும் வெற்றியை கொடுத்தது.
மேலும் இவர் 2016 ஆம் ஆண்டில் இளையதளபதியை வைத்து தெரி படத்தை இயக்கினர். இந்தப்படமும் இவர்க்கு பெரும் வெற்றியை தந்தது. மீண்டும் இயக்குனர் அட்லீ குமார் இளையதளபதி விஜயின் 61வது திரைப்படத்தை பலத்த எதிர்பார்ப்புகளுடன் இயக்கி வருகிறார்.
அதுமட்டுமல்லாது இந்த படம் இராமநாராயணின் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் நிறுவனம் தயாரிக்கும் 100வது படமாகும். இந்த திரைப்படத்தில் இளைய தளபதி விஜய்யுடன் எஸ்.ஜே.சூர்யா, காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேல், கோவைசரளா, சத்யன் ஆகியோருடன் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இருபினும் இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கப்பட்டு முக்கிய நடிகர் நடிகைகள் பங்கு பெறும் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இப்படத்தின் முக்கியமான பல காட்சிகள் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன.
இப்படத்தின் FIRSTLOOK (முதல்பார்வை) இளையதளபதி விஜய்யின் பிறந்த நாளையோட்டி (ஜுன் மாதம் 22ம் தேதி) வெளியாவதாக தெரிகிறது.
இதன் ஆடியோவை வரும் அகஸ்துமதாம் மிக பிரம்மாண்டமாக வெளியிடுவதற்கான ஆயத்த வேலைகளும் நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். கவிஞர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபனின் படத்தொகுப்பு, அனல்அரசின் அனல்பறக்கும் சண்டைபயிற்சிகள், விஜயேந்திரபிரசாத் மற்றும் ரமணகிரிவாசனின் திரைக்கதை மேலும் ஷோபி நடனபயிற்சிகள் உள்ளன.
இவ்வளவு பிரம்மாண்டங்களும் கொண்ட இந்த திரைப்படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடட் சார்பில் முரளிராமசாமி தயாரிக்கிறார். இத்திரைப்படம் அக்டோபர் மாதம் உலகமெங்கும் வெளிவரும் என் எதிபார்க்கப்படுகிறது.
இதெல்லாம் தவிரா இப்படத்தை அட்லி கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.