நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் சீதக்காதி. இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பக்ஸ், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வயதான பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தின் முதல்பார்வை வெளியான போதே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 21 அன்று இணையத்தில் வெளியானது.
வரவேற்பைப் பெற்றிருக்கும் அந்த முன்னோட்டம் வெளியானதை ஒட்டி, விஜய்சேதுபதியை சூர்யா பாராட்டியுள்ளார்.
சூர்யா தன் டிவிட்டரில், ஆல் தி பெஸ்ட் விஜய்சேதுபதி, இந்தப்படத்தில் எட்டு நிமிடங்கள் கொண்ட காட்சியொன்றை ஒரே ஷாட்டில் எடுத்திருப்பதாக அறிந்தேன். படம் பார்க்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன் என்று சூர்யா கூறியுள்ளார்.
இதனால் சூர்யா விஜய்சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர்.