நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் படப்பிடிப்பு மற்றும் படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் இந்நேரத்தில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கே.ஜே.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ₹70 கோடிக்கு வாங்குவதாக தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர், அதாவது விஜய் 63 திரைப்படத்தினை 2020 பொங்கல் பண்டிகை காலத்தில் வெளியிட வேண்டும் என்பதே.
தயாரிப்பு நிறுவனம் கே.ஜே.ஆர் பிலிம்ஸ் கோரிக்கைக்கு இன்னும் உறுதி அளிக்காததால் வியாபாரம் இன்னும் முழுவதுமாக முடியாமல் விரைவில் முடிக்கப்படும் சூழலில் உள்ளது
எப்படியோ ‘விஜய் 63’ திரைப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை விரைவில் கே.ஜே.ஆர் பிலிம்ஸ் வாங்கிவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.