தமிழக விவசாயிகள் பலர் இன்று கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமான விவசாயம், தேவையான நீர் பாசனமின்றி தாங்களால் விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வனைத்தும் அறிந்த மத்திய மற்றும் மாநில அரசுகள் அவர்களுக்கு தேவையான உதவிகளை சீராக செய்யாமல் உள்ளனர்.
இத்தகைய விவசாயிகளின் பிரச்சனைகளை கண்டுகொள்ளத மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து, தமிழக விவசாயிகள் சிலர் ஒரு குழுவாக தலைநகர் டெல்லிக்கு சென்று சுமார் 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு கட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு அங்கு நிர்வாண போராட்டமும் நடத்தினர். இருப்பினும் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கப்பெறவில்லை. அவர்கள் எதிர்பார்த்ததெல்லாம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், போராடும் இந்த விவசாயிகளை வந்து நேரில் சந்தித்தோ அல்லது அவர்களை அவர் அழைத்தோ தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளை விசாரித்து நன்மை செய்வார் என எதிர்பார்த்தார்கள். விவசாயிகளின் எதிர்பார்ப்பு வெறும் ஏமாற்றத்தில் தான் இன்று வரை உள்ளது.
சென்ற மாதம் திரைப்பட நடிகர் விஷால் மற்றும் அவருடன் சில திரைத்துறை நண்பர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளை நேரில் சென்று பார்த்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு அவருடைய குடும்பத்தினர் நடத்தும் ‘தேவி அறக்கட்டளை’ சார்பாக சில உதவிகளை செய்து வருகிறார். இருப்பினும் ‘பிரெண்ட்ஸ் ஆப் பார்மர்ஸ்’ என்னும் அமைப்பை அவர் துவக்கியுள்ளார். இந்த அமைப்பு மூலம் அவரும் அதில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்களும் விவசாயிகளுக்கு நல திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட விஷால் விவசாயிகளுக்கு 10 பேருக்கு உதவி புரிந்துள்ளார்.
இவிஷாலின் இந்த செயலை அறிந்த நட்சத்திர ஜோடி சிநேகா மற்றும் பிரசன்னா தம்பதியினர் தாங்களும் விவசாயிகளுக்கு உதவ விரும்புவதாக விஷாலிடம் தெரிவித்துள்ளனர். விஷாலும் நலிந்த விவசாயிகள் பெயர்களை பட்டியலிட்டு சிநேகா மற்றும் பிரசன்னா ஆகியோரிடம் கொடுத்துள்ளார். அந்த பட்டியலை பார்த்து நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவும் வகையில் மொத்தமாக 2 லட்சம் ரூபாயை விஷால் துவக்கிய ‘பிரெண்ட்ஸ் ஆப் பார்மர்ஸ்’ அமைப்பு மூலமாக சிநேகா மற்றும் பிரசன்னா கொடுத்து உதவியுள்ளனர். பி. பழனியாண்டி, வி.மூக்காயி, என்.தங்கராஜ், கே.ராஜி, ஆர். வெங்கடாசலம், பி. கணேசன், ஜி. மகாதேவன், ஆர்.சதாசிவம், பி.சிலம்பாயி /பழனிசாமி, ஜான் மைகேல் ராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் உதவி பெற்ற விவாசயிகள் ஆவர்.
இந்த நிகழ்வின் பொது விஷாலின் மேலாளர் முருகராஜ், நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரி, நடிகர் அபி சரவணன் மற்றும் சிலர் உடனிருந்தனர்.