லஞ்சம் விவகாரத்தில் அவகாசம் தர மறுத்த டெல்லி போலீஸ்; தினகரன்!..

d
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் தர முயற்சி செய்த வழக்கில் டிடிவி தினகரனுக்கு கூடுதல் அவகாசம் தர டெல்லி போலீசார் மறுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரா என்பவர் அதிகளவு பணம் வைத்திருந்ததை டெல்லி காவல்துறையினர் கண்டறிந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு கையூட்டு அளிப்பதற்காக அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் 1 கோடியோ 30 லட்ச ரூபாய் அளித்ததாக சுகேஷ் சந்திரா ஒப்புக் கொண்டான்.

இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு டெல்லி காவல்துறையினர், டிடிவி தினகரன் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டிடிவி தினகரனிடம் புதன்கிழமை டெல்லி காவல்துறையினர் நேரில் சம்மன் அளித்தனர். அந்த சம்மனில் வரும் சனிக்கிழமை, டெல்லியில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லி காவல்துறை முன் ஆஜராகி விளக்கமளிக்க தனக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை மனுஒன்றை அளித்திருந்தார். தினகரனின் கோரிக்கை மனுவை ஏற்க மறுப்பு தெரிவித்த டெல்லி காவல் உதவி ஆணையர் சஞ்சய் ஷெராவத் தினகரன் நாளை கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response