ஈட்டி’ ஜோடி நடிக்கும் “ஒத்தைக்கு ஒத்தை” படம்

eetti
‘ஈட்டி’ படத்தில் நடித்த அதர்வா, ஸ்ரீதிவ்யா ஜோடி ‘ஒத்தைக்கு ஒத்த’ படம் மூலம் மீண்டும் இணைகிறது.

நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே ‘ஈட்டி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் பர்னீஷ் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் தியாகராஜன், நரேன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சண்டை, காதல் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை பர்னீஷ் அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response