திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை ரம்பாவின் குடும்பம்- வைரலாகும் வீடியோ

rambaa
நடிகை ரம்பா இன்று தன் கணவர் மற்றும் குழந்தையுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரம்பா. இவர் கார்த்திக், ரஜினி, விஜய், பிரபுதேவா, அர்ஜூன், கமல்ஹாசன் ஆகியோர் உள்பட மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு கனடா தொழிலதிபரான இலங்கை தமிழர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
https://youtu.be/WNKVoohnscg
கனடாவில், கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நடிகை ரம்பா கருத்து வேறுபாடு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விருப்ப மனு ஒன்றை தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின் போது ரம்பாவுடன் சேர்ந்து வாழ அவரது கணவரும் விருப்பம் தெரிவித்ததன் பேரில் இருவரும் தற்போது சேர்ந்துள்ளனர்.

இருவரும் சேர்ந்த பிறகு தங்களது இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து முதல் தரிசனமாக திருப்பதி சென்று ஏழுமலையானை குடும்பத்துடன் தரிசித்துள்ளனர்.

Leave a Response