நடிகர் சந்தானம் கைதூக்கி விடும் காமெடியன்கள்!..

santhanam2
நடிகர் சந்தானம் சினிமாவில் முன்னணி காமெடியனாகி பின்னர் ஹீரோவானவர். தற்போது நாயகனாக மட்டும் பல படங்களில் நடித்து வருகிறார். அப்படி தான் நடிக்கிற படங்களில் முன்பு மாதிரி காமெடிக்கான முக்கியத்துவத்தை குறைத்து ஹீரோயிசத்தை அதிகமாக வெளிப்படுத்தி வருகிறார்.

இதன்காரணமாக, அவருடன் நீண்ட காலம் இருந்து வந்த சில காமெடி நடிகர் நடிகைகளுக்கு அவர் படங்களில் வாய்ப்பு இல்லாமல் போனது.காமெடி வாய்ப்புக்காக பலரையும் கேட்டும் எந்தப்பயனும் இல்லை. சந்தானம் டீமை யாரும் கண்டு கொள்ளவில்லையாம். இதை கேள்விபட்ட சந்தானம் தற்போது தான் நடித்து வரும் படங்களில் அவர்களுக்கு ஏதாவது ஒரு கேரக்டர் கொடுத்து அவர்கறை கைதூக்கி விடுகிறார்.

இதனால் சந்தானத்தின் காமெடி டீமைச்சேர்ந்த நடிகர் நடிகைகள் மறுபடியும் பிசியாகி விட்டனர். முக்கியமாக, சிங்கமுத்து, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட சில நடிகர்களை அப்பா வேடங்களில் நடிக்க வைத்தும் பிரமோஷன் கொடுத்துள்ளார் சந்தானம்.

Leave a Response