தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்…

laari
தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீடு கட்டணம் உயர்வை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 30ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர் வேலைநிறுத்தத்தை அடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வந்தது. இதற்கிடையில் நேற்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை ஏற்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து, போராட்டம் தொடர்வதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கட்டணத்தில் 45%க்குப் பதிலாக 23%ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒப்புக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

Leave a Response