விருத்தாசலம் – திரைப்பட விமர்சனம்:

viruthachalam
படம்- விருத்தாசலம்

சினிமா வகை- காதல், சமுக சேவை, அடிதடி,

கதை
திரைகதை
வசனம்
இயக்கம்- ரத்தன் கணபதி, ஒளிபதிவு- சிவ நேசன், இசை- ஸ்ரீராம், பாடல்- இளையகம்பன், சண்டை- பயர் கார்த்திக், தயாரிப்பு- பி.செந்தில்முர்கன்,

நட்சத்திரங்கள்- விருத்தகிரி புதுமுகம், ஸ்வேதா புதுமுகம், சமீரா, ஷெரீன் தாஹா, சம்பத்ராம், பாவாலட்சுமணன், வெண்ணிலா கபடிகுழு ஜானகி, மதுபானகடை ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர். மனோகர், சுதா, இளங்கோவன், அபிஷேக், நிருபமா, இயக்குனர் நாராயணமூர்த்தி

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் தயாரிக்கும் படம் ‘விருத்தாசலம்’.

இந்த படத்தில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் தலைவராக இருந்த போது அவரது சிறந்த நிர்வாகத்திற்காக ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் விருது பெற்றவர்.

கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சம்பத் ராம், பாவாலட்சுமணன், காதல்சரவணன், வெண்ணிலா கபடிக்குழு ஜானகி, மதுபானக்கடை ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுதா, இளங்கோ, அபிஷேக், நிருபமா, டைரக்டர் நாராயணமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இக்கதையில் “கிராமத்தில் குடித்துவிட்டு தன் போக்கில் சுற்றித் திரிபவர் விருதகிரி. தனது வாழ்கையில் எதையோ இழந்து விட்டு எதையோ தேடுவது மாதிரியானது அவரது வாழ்க்கை. அப்படிப்பட்டவரின் நிகழ்கால வாழ்கையை ஒரு பெண் எப்படி புரட்டிப் போடுகிறாள் என்பதுதான் படத்தின் கதை.

“என் ராசாவின் மனசிலே, பருத்தி வீரன்” மாதிரியான கிராமத்து யதார்த்த மனிதர்களை இதில் பிரதிபலித்திருக்கிறோம். இந்த கதாபாத்திரத்திற்கு விருதகிரி நூறு சதவீதம் பொருந்தி விட்டார் என்பது குறிபிடத்தக்கது.

இந்த விருதகிரி நிஜ வாழ்விளும் சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர். அவர் இருக்கும் வித்தாசலம் பகுதியில் உள்ள கச்சிராய நத்தம் என்ற ஊரில் யாருக்காவது மருத்துவ உதவி தேவைபட்டால், அவர்களை தனது சொந்த காரில் அழைத்து வந்து சென்னையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வார். மேலும் உயிருக்கு போராடிய எத்தனையோ பேரின் காப்பாற்றி உள்ளார்.

தனது சொந்த வேலைகளைக் கூட பெரிதாக நினைக்காமல் மற்றவர்களின் உயிர் காப்பாளனாக சேவை செய்கிறார். வாழுகிற வரைக்கும் நம்மால் முடிந்தவரை, மற்றவர்களை வாழ வைத்து பார்ப்போமே என்று சொல்கிறார். அவரது பெருந்தன்மை என்னை மட்டுமல்ல எங்கள் யூனிட்டில் உள்ள அத்தனை போரையும் பெருமைப்படுத்தி விட்டது,” என்கிறார் இயக்குனர் ரத்தன் கணபதி.

மொத்தத்தில் இந்த நிகழ்காலா விருதகிரியும் நிழல்காலா விருதகிரியம் நிச்சயம் ஜெயிக்கட்டும்.

Leave a Response