8 தோட்டாக்கள் -விமர்சனம்

8Thottagal
8 தோட்டாக்கள்- விமர்சனம்

சினிமா வகை- காதல், பாசம், தேடுதல் வேட்டை,

இயக்கம்- ஸ்ரீ கணேஷ், படத்தொகுப்பு-நாகூரான், இசை-கே.எஸ்.சுந்தரமூர்த்தி, பாடல்கள் – குட்டி ரேவதி, ஜி.கே.பி., ஸ்ரீகணேஷ், நடனம் – தினேஷ், பிருந்தா, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், ஒளிபதிவு- தினேஷ் .கே.பாபு,

நட்சத்திரங்கள்- புதுமுகம் அபர்ண முரளி, புதுமுகம் வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன்.

இப்போதைய புதிய இயக்குநர்களில் சிலர் புதிய பார்வையுடன், தெரிந்த கதையை, தெரியாத திரைக்கதையுடன், அசத்தலான இயக்கத்துடன் கொடுக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அந்தத் திறனுடன் உள்ளே வந்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ். வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம்.வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் ஐ.பி.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்

இக்கதையில் சத்யா செய்யாத கொலை குற்றத்துக்காக எட்டு வயதில் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கிறார்கள் அங்கு சத்யாவின் மீது பாசம் கொள்ளும் ஒரு போலீஸ் அவரை ஊக்கிவித்து போலீஸ் அதாவது சப் இன்ஸ்பெக்டர் ஆக ஆகுகிறார் ஆனால் சத்யாவுக்கு பிடிக்காத வேலை இருந்தும் வேலையில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நேர்மையான போலீஸ் ஆக வேலை செய்கிறார் இதனால் அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருப்பவர்கள் அனைவரும் இவருக்கு எதிரி.

இன்ஸ்பெக்டர் மைம் கோபியிடம் புகார் கொடுக்க வரும் சிவாஜியை அடித்து விடுகிறார் அவர் ஒரு பெண் நிருபரால் டிவியில் நடந்த விவரத்தை சொல்ல மைம் கோபி அவர் வேலை செய்யும் இடத்துக்கு சென்ற அவரின் டைப்ரெட்டேர் மிஷினை உடைத்து விடுகிறார்.

இதை அறிந்த சத்யா அவருக்கு புது மிஷின் வாங்கி கொடுக்கிறார் இதனால் கடுப்பான மைம் கோபி சத்யாவல் முடியாத கேஸ் ஒன்றை கொடுக்கிறார் அப்போது அவரிடம் ஒரு தூப்பாக்கி கொடுக்கிறார் அதில் 8தோட்டகள் லோட் செய்யப்பட்டுள்ளது என்று எழுதி கொடுக்க படுகிறது ஒரு ரௌடியை தொடரும் நேரத்தில் பஸ்யில் இந்த துப்பாக்கியை ஒரு பயன் திருடுகிறான் இங்கு இருந்து தான் கதை ஆரம்பம் இதனயைறிந்த மைம் கோபி வெற்றியின் வேலை காலியாகப் போகிறது என்று எச்சரிக்கிறார். ஆனாலும், சிவாவின் சிபாரிசால் ஒரு நாள் அவகாசத்தில் அந்தத் துப்பாக்கியை மீட்டு வரும்படி சொல்லியனுப்புகிறார் மைம் கோபி.

அதற்குள்ளாக ஒரு வங்கியில் துப்பாக்கி முனையில் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் மூன்று கொள்ளையர்கள் ஒரு கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள். அந்தச் சம்பவத்தில் ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக கொல்லப்படுகிறாள். போலீஸ் திகைத்து தேட ஆரம்பிக்கிறது. இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் பாண்டியனான நாசர் விசாரிக்க வருகிறார்.

வழக்கை விசாரிக்கத் துவங்க அந்த வங்கிக் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெற்றி தொலைத்த துப்பாக்கி என்பது தெரிய வருகிறது. இப்போது வெற்றி தன் துப்பாக்கியை தொலைத்தது தெரிய வர டிபார்ட்மெண்ட்டில் அவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். இருந்தாலும் அவரையும் விசாரணைக் குழுவில் சேர்த்துக் கொள்கிறார் நாசர்.

இடையில் வெற்றிக்கு அபர்ணாவுடன் ஆரம்பித்த பழக்கம் காதலாகி இருவரும் காதலிக்கவும் துவங்குகிறார்கள்.

இன்னொரு பக்கம் நகரில் தொடர்ந்து சில கொலைகள் இதே துப்பாக்கியினால் நடக்கத் துவங்க.. போலீஸ் குழம்புகிறது.. குற்றவாளியை நெருங்க முடியாமல் தவிக்கிறது.. அதே சமயம் மீடியாக்களும் பரபரப்புச் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு சென்னையை பதைபதைக்க வைக்க.. எப்படியாவது குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார் நாசர்.

இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்த திரில்லிங்கான படத்தின் சுவையான திரைக்கதை.

இந்த படத்தில் ஹீரோ வெற்றி சத்யாவாக நடித்துள்ளார். இவர் இதில் முதல் படம் போல பார்க்காமல் சிறப்பாக நடித்துள்ளார் பாசத்துக்கு ஏங்கும் இளைஞனாக அதேபோல பொறுப்பான காவல் துறை அதிகாரியாகவும் சிறப்பாக செய்துள்ளார்.

அறிமுக நாயகி அபர்ணா பாலமுரளி மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்தவர் தமிழில் முதல் படம் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் யதார்த்தமாக நடித்துள்ளார் மலையாள நடிகைகள் என்றாலே திறமையானவர்கள் என்று நிருபித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் அவரின் பங்கு பெருசாக ஒன்னும் சொல்லும் படி இல்லை கொடுத்த வாய்ப்பை மிகவும் அழகாக செய்துள்ளார்.

இந்த படத்தின் முதுகு எலும்பு என்று தான் சொல்லணும் நிச்சயம் இந்த படத்தின் நடிப்புக்கு இவருக்கு தேசிய விருது மாநில விருது நிச்சயம் கொடுக்கவேண்டும்.ஆம் இதுவரை குணசித்திரத்தில் நடித்த M.s.பாஸ்கர் தான் இந்த படத்தின் வில்லன் இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரம் பொறுப்பான குடும்ப தலைவன் மற்றும் கொள்ளை கும்பல் தலைவன் என்று இரண்டு வேடத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார்.

இதில் நாசர். இன்ஸ்பெக்டர் பாண்டியனாக உள்ளே வந்து விசாரிக்கத் துவங்கி.. இடையில் வெற்றி மீது பரிதாபப்பட்டு அவரையும் டீமில் சேர்த்துக் கொண்டு, அதனாலேயே தனது உயிரை காப்பாற்றிக் கொண்டு, மேலதிகாரிகளுக்காக மீண்டும் வெற்றியை வெளியேற்றினாலும் டிபார்ட்மெண்ட் பாசத்தினால் கிளைமாக்ஸில் பரிதாபமாக உயிரைவிடும் அந்த சோகத்தை நிஜமாகவே ரசிகனின் மனதில் விழுக வைத்திருக்கிறார் நாசர்.

மொத்ததில் இப்படத்தின் கதையும் திரைக்கதையும் அருமையாக அமைத்துள்ளார் ஆனால் இப்படம் விறுவிறுப்பு கொஞ்சம் குறைகிறது. இறந்தாலும் தன் குரு நாதர் பாணியில் ஒரு குத்து பாட்டு என்ற எதுவும் இல்லாமல் இயக்கியவிதம் அருமை தமிழுக்கு கிடைத்த இன்னும் ஒரு சிறந்த இயக்குனர் பட்டியலில் இவரும் நிச்சயம் இடம் பிடிப்பார் என்பது உறுதி.

தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு நல்ல படம் நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டிய படம் என்று சொல்லலாம் இப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்த்து மகிழுங்கள்.

Leave a Response