ஒரு டிக்கெட்டிலிருந்து 1 ருபாய் விவசாயிகளுக்கு-விஷால் அதிரடி…

thayaaripaalargal sangam
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக நடிகரும் நடிகர் சங்கத்தலைவருமான திரு.விஷால் அவர்கள் நேற்று பதவியேற்று பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் பூங்கொத்து அனுப்பி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

2017- 2019 க்கான திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தடுபதற்கான தேர்தல் இம்மாதம் 2ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி எஸ் ராஜேஸ்வரன் அவர்கள் அதிகாரியாகப் பொறுப்பேற்று இத்தேர்தலை நன்றாக நடத்தினார்.

இத்தேர்தலில் விஷால் தலிமையில் போட்டியிட்ட “நம்ம அணி” பெருவாரியாக வெற்றி பெற்றது.பின்னர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக திரு விஷால் அவர்கள் வெற்றி பெற்றார். துணை தலைவராக நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களும் கௌதம் மேனன் அவர்களும் வெற்றி பெற்றனர்.கௌரவ செயலாளர் பதவிக்கு திரு ஞானவேல் ராஜாவும் கதிரேசன் அவர்களும் வெற்றி பெற்றனர். பின்னர் இந்த புதிய நிர்வகிகளுகனா பதவியேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திர திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவை தமிழ் பற்றுடன் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி ரோகினி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் முதலில் பேசிய எடிட்டர் மோகன் வெற்றி பெற்ற அனைத்து புதிய நிர்வாகிகளையும் மேடைக்கு அழைத்து. இவர்கள் அனைவர்களுக்கும் ராஜ் கண்ணு, எஸ்.ஏ சந்திர சேகர், கே.டி குஞ்சுமோன், ராஜ்கிரண், தாணு, கேயார், ஏ.எல் அழகப்பன் டி.சிவா, ஆகியோர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அனுப்பிய வாழ்த்து செய்தியில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். பின்னர் இவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த கடவுள் துணையிருப்பார் எனவும் கூறியுள்ளார்.

“உண்மையான நாயகன் விஷால். இந்த சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற நாயகன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு மறுமலர்ச்சி ஏற்படக்கூடிய காலம் இது. ஒரே வருடத்தில் 2 அதிசயங்கள் நடைபெற்றுள்ளது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என இரண்டையுமே விஷால் அணி கைப்பற்றியுள்ளது.” என்று பேசினார் எடிட்டர் மோகன்.

பின்னர் தயாரிப்பாளர்களின் சார்பாக விஷால் அதிரடியாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவும் விதத்தில் அவர் தமிழ்நாட்டில் திரையரங்கில் ஏதாவது ஒரு நாளில் வெளியாகும் திரைபடத்தின் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் என்று எடுத்து விவசாயிகளுக்கு கொடுக்கவுள்ளோம் என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தமிழ் திரையுலகில் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு படத்தின் பூஜை ஆரம்பமுதல் முடியும் வரை எந்த பிரச்சனை வந்தாலும் எந்நேரமும் நாங்கள் உதவிபுரிய தயாராகவுள்ளோம் எனவும் தெரிவத்துள்ளார்.

Leave a Response