ஆம்புலன்ஸ் ஓட்டிய சமுத்திரக்கனி…

Thondan
சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் ‘தொண்டன்’. இப்படத்தில் சுனைனா, விக்ராந்த், அர்த்தனா, சூரி, தம்பி ராமையா, கஞ்சா கருப்பு, ஞானசம்பந்தன், வேலா ராமமுர்த்தி, நமோ நாராயணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ் சார்பாக ஆர்.மணிகண்டன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு என்.கே.ஏகாம்பரம் மற்றும் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்திலுள்ள பாடல்களை யுகபாரதி மற்றும் விவேக் எழுத, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தை பின்னணியாக வைத்து இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவன் எதிர் கோஷ்டியால் சரமாரியாக வெட்டப்பட்டு சாலையில் கிடக்க, அவன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறான். வெட்டுப்பட்டவன் காப்பாற்ற படுகிறானோ என்ற காரணத்தினால் எதிர் கோஷ்டியினர் ஆம்புலன்ஸை தாக்க முயற்சிக்க, என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் மீதமுள்ள கதை.

சமுத்திரக்கனி இப்படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக நடிக்கிறார். ஆமுலன்ஸ் உதவியாளராக விக்ராந்த் நடிக்கிறார். சுனைனா ஒரு டீச்சராக சமுத்திரக்கனியின் மனைவி கதாச்பாதிரத்தில் நடித்துள்ளார். சுனைனா அண்ணனாக நமோ நாராயண நடிக்க, கஞ்சா கருப்பு ஒரு முக்கிய கதாச்பாதிரம் ஏற்று நடித்துள்ளார். இப்படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லை என்று சொல்கிறார் இப்படத்தின் நாயகனும், இயக்குனருமான சமுத்திரக்கனி.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 9ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. ‘அப்பா’ திரைப்படத்தை போல மீண்டும் ஒரு நல்ல படத்தை இந்த கோடை விடுமுறையில் சமுத்திரக்கனி தருவார் என நம்புவோம்.

Leave a Response