“தேவ்” விமர்சனம் இதோ..!

கார்த்திக், ரகுல் பிரீத், ஆர்.ஜே விக்னேஷ், பிரகாஷ்ராஜ், அம்ருதா ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தான் தேவ். இந்த படத்தை அறிமுக  இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ளார்; ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த காலத்துக்கான ஒரு லவ் ஸ்டோரி என்ற அடையாளத்துடன்உருவாக்கப்பட்ட இந்த படம், காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளது. காதலை அடிப்படையாககொண்ட, திரைக்கதை என்றாலும், நட்பு, அட்வென்ச்சர், காமெடிஎன படம் முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன.

ஹீரோ கார்த்தி, எல்லாவற்றையும் வித்தியாசமாக பார்க்கும் ஒரு கேரக்டர்.மற்றவர்கள் போல8 மணி நேரம்வேலை, வீடு, குடும்பம்என்றில்லாமல் இயற்கையைரசிக்க வேண்டும்,உலகை சுற்றி பார்க்க வேண்டும்; இமய மலையின் மீது நிற்கவேண்டும், என பல்வேறு ஆசைகளுடன் சுற்றித் திரிகிறார். கோடீஸ்வர வீட்டில் பிறந்தது ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

பணக்கார வாரிசானகார்த்திக்கு, இரண்டு பணக்கார நண்பர்கள். அவர்களின் வற்புறுத்தலால் மற்றொரு கோடீஸ்வரபெண்ணானதொழிலதிபர் ரகுலை காதலிக்கிறார். இதனாலேயே படம் முழுவதும் ஒரு Elite லவ் ஸ்டோரி என்ற பீலிங் வருகிறது.

வீட்டில் உள்ள 25 சூப்பர் பைக்குகளை விட்டுவிட்டு, ஆடி காரில்சுற்றும் பணக்கார பையன் கார்த்தி, அவரது உயிர் நண்பர்களாக ஆர்.ஜே விக்னேஷ் மற்றும் அம்ருதா. காதல் மீது கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்லாமல் தனிமையில் வாழ்ந்து விடலாம், என நினைத்துக் கொண்டிருக்கும் கார்த்தியின் தொல்லை தாங்க முடியாமல், அவரை லவ்வில் சிக்கி பிஸிஆக்க விக்னேஷ் முயற்சி செய்கிறார்.நண்பர்களின் வற்புறுத்தலால், கண்ணை மூடிக்கொண்டு யாரோ ஒரு பெண்ணுக்கு பேஸ்புக்கில் பிரென்ட் ரெக்வஸ்ட்கொடுக்கிறார் கார்த்தி.

அவர்தான் ரகுல் பிரீத். வெளிநாட்டில் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தை நடத்திவரும் அவர், ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாத ஒரு கேரக்டர் ரகுல், துரத்தி டார்ச்சர் செய்யாமல், காதலன் படப் பாணியில்பல வித்தைகள் காட்டி ஹீரோயினை காதல் வயப்பட வைக்கிறார் கார்த்தி.அதுவரை அட்வென்ச்சர்,நட்பு என இருந்த திரைப்படம், காதல் படமாக மாறுகிறது. காதல், பிரிவு, சோகம் பின்னர் ஒரு எமோஷனலான கிளைமாக்ஸோடுமுடிகிறது படம்.

படத்தின்முதல் பாதி மிக வேகமாகவும் ஜாலியாகவும் செல்கிறது. அற்புதமான கேமரா, பின்னணி இசை, கலர்புல்லான கேரக்டர்ஸ் எனபொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளதால் அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் உள்ளது.

காதலர்கள் பிரிவதற்காக சொல்லப்படும் காரணம் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாக இருந்தாலும், கோடீஸ்வர காதல் ஜோடிகள்இப்படி தான் சண்டை போட்டுக் கொள்வார்கள் போல, என்றும் ஒரு பக்கம் தோன்றுகிறது.

இமயமலை ஏறுவதை கிளைமாக்ஸில் வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை பின்னணி இசை ப்ளஸ். ஒட்டு மொத்தத்தில், தேவ் ஒரு ஜாலியான அட்வென்ச்சர் ரைடு.

Leave a Response