அறம் படத்தில் இடம்பெறும் சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிகை தன்ஷிகா நடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகை தன்ஷிகா, தற்போது அறம் திரைப்படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அறம் படத்தில் சிகரெட் பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியிருக்கும் என இயக்குநர் ஆனந்த் தெரிவித்தவுடன், எந்த வித நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக தன்ஷிகா ஒப்புக் கொண்டாராம்.மேலும் பாலியல் தொழிலாளிகளுக்கே உரிய நடை,உடை,பாவனைகளுக்கு ஏற்றவாறு உடனே தன்னை மாற்றிக் கொண்டதாக தன்ஷிகாவை இயக்குநர் ஆனந்த புகழ்ந்துள்ளார்.
கொல்கத்தாவில் செயல்படும் விபச்சார விடுதிகளை கதைக்களமாகக் கொண்டு, அறம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.