கேக்,பழக்கூட்டு, சாண்ட்விச் என பிரசாதமாக தரும் சென்னை கோயில்!

CAKE
இதுவரை கோயில் என்றாலே எப்போது சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் என பிரசாதமாக வழங்கு விதமாக வந்தது. இந்த வழக்கத்தை மாற்றும் விதமாக கேக், பழக்கூட்டு,சாண்ட்விச், பர்கர்கள், பிரவுணிஸ் மற்றும் செர்ரி தக்காளி சாலடுகள் ஆகியவற்றை பிரசாதமாக வழங்கி அசத்தி வருகிறது சென்னை, படப்பையில் உள்ள ஜெய துர்கா பீடம் என்றா கோயிலில் புதுவித பிரசாதம் கொடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு கேக், சாண்ட்விச் போன்ற வித்தியாசமான உணவு வகைகளை பிரசாதமாக கொடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு கொடுக்கப்பட்டு வரும் இந்த உணவு பொட்டளங்களில் உணவு பாதுகாப்பு துறையால் பாதுகாப்பான உணவு என அளிக்கப்பட்ட சான்றோடு வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இங்கு பிரசாததிற்கு டோக்கன்கள் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனை ஒரு பிரசாதம் வழங்கும் மெஷினில் போட்டால் அதில் வைக்கப்பட்டுள்ள உணவு பிரசாதமாக கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இங்கு வழிபட வந்த சுப்புலட்சுமி என்ற 81 வயதான மூதாட்டி கூறும்போது, “நான் பல கோயிலுக்கு சென்றுள்ளேன். இங்கு தான் முதன் முறையாக இதுபோன்ற கேக்குகள் பிரசாதமாக கொடுப்பதை பார்க்கின்றேன். அதோடு கோயிலில் பாரம்பரியமான முறையில் எண்ணெய் தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.” என தெரிவித்தார்.

Leave a Response