‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றிவாய்ப்பு தி.மு.க.,வுக்கு சாதகமா’? :-கருத்து கணிப்பு..

rk nagar...
தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலை தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தந்திடிவி கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் கவலைக்குரியது என 74 சதவீதம் பேரும், எதிர்பார்த்தது என 22 சதவீதம் பேரும், கருத்து இல்லை என 4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.சசிக்கு பன்னீர் எதிர்ப்பு தெரிவிப்பார் என எதிர்பார்க்கவில்லை என 55 சதவீதம் பேரும், எதிர்பார்த்ததாக 41 சதவீதம் பேரும், கருத்து இல்லை என 4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்த்ததாக 41 சதவீதம் பேரும், கருத்து இல்லை என 4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.சசிகலாவுக்கு பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததை 84 சதவீதம் பேர் வரவேற்றுள்ளனர். கட்சிக்கு பன்னீர் துரோகம் செய்துவிட்டதாக7 சதவீதம் பேரும், கருத்து ஏதுமில்லை என 9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூரில் தங்கியது ஜனநாயகத்தின் கரும்புள்ளி என 83 சதவீதம் பேரும், உட்கட்சி விவகாரம் என 12 சதவீதம் பேரும், கருத்துஏதுமில்லை என 5 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.எம்.எல்.ஏ.,க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டது, அதிமுகவின் அச்சம் என 81 சதவீதம் பேரும், அதிமுகவின் ஒழுக்கம் என 11 சதவீதம் பேரும், கருத்து ஏதுமில்லை என 8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுகவின் எதிர்காலம் பற்றிய கேள்விக்கு, அக்கட்சி சிதைந்து மற்றொரு அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என 46 சதவீதம் பேரும். தற்போதைய குழப்பத்தை சமாளித்து வலுவாக நிற்கும் என 44 சதவீதம் பேரும், 10 சதவீதம் பேர் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை தி.மு.க.,வுக்கு சாதகம் என 61 சதவீதம் பேரும், ஓ.பி.எஸ்., அணிக்கு சாதகம் என 26 சதவீதம் பேரும், பா.ஜ.,வுக்கு சாதகம் என 9 சதவீதம் பேரும் மற்றவர்களுக்கு சாதகம் என 4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். இக்காரணத்தினால் ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வெற்றிவாய்ப்பு தி.மு.க.,வுக்கு சாதகமாக இருப்பதாக கருத்து கணிப்பில் கூறப்படுகிறது …..

Leave a Response