இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தொட்டது..

கொரோனாவால் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 217 பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 1,98,706 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 217 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,815 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,00,302 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,01,497 ஆக உள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 72,300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 31,333 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,465 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டில் 24,586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, குணமடைந்தோர் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Response