பான் கார்டுக்கு ஆதார் எண் அவசியம்!

link-Aadhar-card-to-pan-card
2017 டிசம்பர் மாதத்திற்குள் பான் கார்டு உடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு சேவைகள், நலத்திட்டங்கள் என அனைத்திற்கும், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலமாக, அமெரிக்கா போன்று இந்தியாவிலும் ஆதார் எண்ணை ஒரே அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, தற்போது பான் எனப்படும் நிரந்தர வருமான வரிக்கணக்கு எண் உடன், ஆதார் எண்ணையும் இணைக்கும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்த பணியை முடிக்கவும் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாவிட்டால், அந்த பான் கார்டுகள் செல்லாது என அறிவிக்கப்படும் என்றும், புழக்கத்தில் உள்ள போலியான பான் கார்டுகளை கண்டுபிடிக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஆதார் அட்டை மட்டுமே ஒரே ஒரு அடையாள அட்டையாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகக் கடந்த வாரம், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் நிதி மசோதா திருத்தங்களை அறிவிக்கும்போது கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response