ஜெயலலிதா மரணத்தின் மர்மம் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாத பிரதமர் – நடிகை கவுதமி காட்டம்…

Gautami
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 22’ம் தேதி சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல்நலமின்றி திடீரென அனுமதிக்கப்பட்டார். மருத்துமவமையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அவர்கள் 75 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் குணமடையாமல் மருத்துவமனையிலேயே இறந்துவிட்டார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் பலர் சந்தேகங்களை எழுப்பி வந்த நிலையில் நடிகை கவுதமி அவர்கள் டிசம்பர் 2016 அன்று தனக்கு ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமுக வலைதளங்களில் பிரதமர் மோடி அவர்களின் கவனத்திற்கு என்று ஒரு கடிதம் எழுதினர். அந்த கட்டுரை பற்றிய பெரும்பாலான நாளிதழ்கள், வார/மாத பத்திரிகைகள், தொலைகாட்சிகள், இணையதளங்களிலும் மற்றும் சமுக வலைதளங்களிலும் கவுதமியின் கட்டுரை பற்றி செய்திகளும் விவாதங்களும் வந்தன.

சமுக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது பற்றி கவுதமி எழுதிய கடிதம் பற்றிய செய்தி வந்தும் அந்த செய்தி இதுவரை பிரதமர் கவனத்துக்கு செல்லாதது பற்றி தன்னுடைய பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தி குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது, தான் டிசம்பர் 8’ம தேதி சமுக வலைத்தளத்தில் தன்னுடைய பக்கத்தில், ஜெயலலிதா அவர்களின் மரணம் பற்றி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், அந்த கடிதத்தின் நகலை பிரதமர் அவர்களின் டுவிட்டர் பக்கத்திற்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். கவுதமிக்கு ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் மீது அவர் மனதில் இருந்த வலி மற்றும் சந்தேகங்களை தான் தெரிவித்திருந்ததாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பிரதமருக்கு எழுதிய கடிதம் உலகம் முழுவதும் பரவி, மக்கள் பலர் கவுதமிக்கு துணையாக குரல் எழுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு தான் ஜனநாயக முறையில் அமைந்துள்ள ஒரு வழியில் தான் தன்னுடைய கடித்ததை எழுதியதாகவும் தெரிவிக்கிறார்.

பிரதமர் மோடி அவர்கள் தற்போதுள்ள பரிமாண வளர்சிகளை மற்ற முந்தைய அரசியல் தலைவர்களை விட மிக வேகமாக உபயோகிப்பவர் என்று குறிப்பிட்டுள்ளார். இன்று வளந்து இருக்கும் சமுக வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சியை உபயோகிப்பத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் பிரதமர் மோடி என குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களையும் டிஜிட்டல் உலகிற்கு மாற்ற முயற்சிகள் பல எடுத்தவர் நம்முடைய பிரதமர் மோடி என தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரதமருக்கு தான் எழுதியுள்ள ஒரு கடிதம் சமுக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்தியாக வந்தும், அது பிரதமர் அவர்களின் பார்வைக்கு செல்லாமல் தப்பித்துள்ளது. இத்தகைய போக்கை நாம் சந்திப்பது, நம்மை சூறையாடுவதை போன்ற செயலாகும். நம்முடைய குறைகளை கேட்டறிவேன் என்று கூறிய ஒரு அரசியல் தலைவர், ஜனநாயக முறையில் தான் பிரதமருக்கு சமுக வலைத்தளம் மூலம் கோரிக்கையாக அனுப்பிய ஒரு கடிதத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில், ஒரு குடிமகனின் கோரிக்கைகள் எவ்வாறு நேர்மையான முறையில் அனுசரிக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை கவுதமி.

தான் அந்த கடிதம் எழுதும் போது, பிரதமர் மீது அதிநம்பிக்கை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அவர் முன்பு குறிபிட்டுள்ள அணைத்து குடிமகன்களும் தனக்கு சமம் என்பது உண்மையெனில், தன்னுடைய கடிதத்திற்கான பதில் ஏன் மறுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்புகிறார் கவுதமி. தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு மத்திய அரசால் புறக்கணிக்கப்படுவதை போல் தோன்றுவதாகவும், முன்பு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மத்திய அரசிலிருந்து பல உறுப்பினர்களும், அலுவலர்களும் மருத்துவமனைக்கு பல முறை வந்து சென்றனர். ஆனால் தமிழக மக்கள் ஒருவருக்கு கூட ஜெயலலிதா அவர்களின் உடல்நலம் பற்றிய உண்மையை எவரும் தெரிவிக்கவில்லை. தமிழக மக்களின் கேள்விகளுக்கு பதில் மறுப்பதும், ஜெயலலிதா அவர்களுக்கு நீதி மறுப்பதும், தமிழகத்திற்கு மறுக்கப்படும் நீதியாகும் என தெரிவித்துள்ளார் கவுதமி.

ஜெயலலிதா அவர்களின் மறைவு, வரதா புயல் ஆகிய துயர சம்பவங்கள் தமிழக மக்களின் மனதை மிகவும் வாட்டி எடுத்துள்ளதாகவும், அதனால் தமிழக மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். உலகளவில் உள்ள தமிழகத்தின் ஒரு பாரம்பரிய கலாச்சாரத்தை கிடைக்கப்பெற அமைதியான முறையில், தமிழக மக்கள் உரிமையோடு போராட வேண்டியுள்ளது. அரசு தங்களுடைய அழுகைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்று அரசு மீது நம்பிக்கை இழந்து பல விவசாயிகள் தங்களுடைய உயிரை மாண்டுள்ளனர் என காட்டமாக குறிப்பிட்டுள்ளார் கவுதமி.

இத்தகைய பேரிழப்புகளுக்கு பிறகும், மத்திய அமைச்சகத்திடமிருந்து உதவிகரமான ஒரு பதில் இருக்குமென நம்பினோம்! அரசு ஒருவருடைய கேள்விக்கான பதிலை அளிக்க நேரம் எடுத்துக்கொண்டாலும், நீண்ட காலமாகி பதில் கிடைக்க பெறவில்ல என்றால் அதுவும் ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை போல் உள்ளது. அதுவும் பொறுப்பில் இருந்த ஒரு முதல்வர் மர்மமான முறையில் இறந்துள்ளார், அவருடைய மறைவு பற்றிய உண்மையைஒவிழு மறைவின்றி மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டியது ஒரு ஜனநாயக கடமையாகும். ஜெயலலிதா அவர்கள் ஒரு சிறந்த தலைவராகவும், கோடி கணக்கான மக்களின் உள்ளத்தில் இடம் பெற்றவர் என்றும், மக்களின் வேதனையையும், வருத்தத்தையும் அரசு புரிந்து கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் கவுதமி.

அரசு நம்முடைய கோரிக்கையை கேட்டறிய, அதற்கு நிவர்த்தி செய்ய நாம் தெருவில் இறங்கி வேறு ஒரு போராட்டத்தை செய்யவேண்டி இருக்கும். அவ்வாறு ஒரு போராட்டத்தை மேற்கொண்டதால் தான் நமக்கு நியாயம் கிடைக்கப்பெற்றது என நடிகை கவுதமி தன்னுடைய பத்திர்க்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Response