எனக்கு வாய்த்த அடிமைகள் – திரை விமர்சனம்:

images
எனக்கு வாய்ந்த அடிமைகள் —
கவலையா, மன அழுத்தமா, இப்படி இருந்தாலும், இல்ல இந்த வாரம் படம் பார்க்க போலாம்னு முடிவு செஞ்சா உடனே
எ வா அ. படத்துக்கு டிக்கட் எடுங்க, செம ஜாலியான படம்.

வியர்வையை வெளியே விடாமல் ஏ சி யிலியே கம்யூட்டர் லேப்டாப்க்கு முன்ன உட்காருபவர்கள் கவுன்சிலிங்குக்கு அதிகமாக என்னிடம் வறாங்கன்னு சைகாட்ரிஸ்ட் டாக்டராக வரும் தம்பி ராமைய்யா சொல்ற நிஜத்திலிருந்து படம் ஆரம்பம்.

ஆனால் படத்தின் கதை வேற, காதலித்தவள் செஞ்ச தப்பால அவளை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள போகும் ஹீரோ – தன் நண்பர்களிடம் இந்த தகவலை மொபைலில் கூற அதனால் அந்த 3 அடிமைகள் இல்ல நண்பர்களுக்கு நடக்குற செம கலாட்டா காமெடிகளே படம்.

டைட்டிலில் ஒரு சேனல் விழாவில் பத்மஸ்ரீ சூப்பர்ஸ்டார் ரஜினி நட்பு குறித்து கூறி துவங்கியது சூப்பர். கருணாகரன், காளி படற பாடு அட்டகாசம். கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் தர்மத்தின் தலைவன் பாட்டு. செம சீரியஸான பம்பாய் படப்பாடலான உயிரே பாடலில் இசையை பயன்படுத்தி மொட்ட ராஜேந்திரன் ரியாக்‌ஷன் வயிறி வலிக்க சிரிப்புக்கு உத்தரவாதம்.

இசை ஒளிப்பதிவு அருமை…ஓவ்வொரு காட்சியிலும் ஒரு காமெடி தொடர்வது சூப்பர். லாஜிக் பார்க்காமல் அனுபவிங்க…ஆராயவே வேண்டாம்

Leave a Response