நடிகர் மற்றும் அதிமுக பிரமுகர் பஷீர் என்கிற விஜய்கார்த்திக் மோசடி வழக்கில் கைது

WhatsApp Image 2017-01-12 at 8.33.41 PMநடிகர் பஷீர் என்கிற விஜய்கார்த்திக், பாபு, மற்றும் சௌத்ரி ஆகிய மூவரும் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் வசித்து வரும் துருக்கி நாட்டை சேர்ந்த ஒருவரிடம் பஷீர் பென்ஸ் காரை வாங்கிக் கொண்டு ரூ.7 லட்சம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். காரை விற்றவர் பஷீரிடம் தனக்கு சேரவேண்டிய ரூ.7 லட்சம் பணத்தை கேட்டு செல்லும்போது பஷீர், பாபு, சௌத்ரி ஆகிய மூவரும் வெளிநாட்டவரை அடித்து பணத்தை கொடுக்காமல் துரத்தியுள்ளனர்.

துருக்கி நாட்டை சேர்ந்தவர் தன் நாட்டின் எம்பஸியில் புகார் செய்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட எம்பஸியினர் சென்னை காவல்த்துறை ஆணையரிடம் புகாரை அனுப்பியுள்ளனர்.

காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து இந்த புகார் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பபட்டது. இந்த புகாரை விசாரித்த குற்றப்பிரிவு காவலர்கள் பஷீர், பாபு, சௌத்ரி ஆகிய மூன்று பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். காவல்துறை விசாரணையில் இந்த மூவரும் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த மூவர் மீதும் காவல்துறையினர் செக்சன் 384-மிரட்டிப் புடுங்குதல், செக்சன் 506/2- மிரட்டல் மற்றும் செக்சன் 420-மோசடி ஆகிய மூன்று வழக்குகளையும் மூவர் மீதும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்து பின்னர் மூவரும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பஷீர் சிறு சிறு பாத்திரங்களில் “கருப்பசாமி குத்தகைதாரர், தி நகர், பூவா தலையா, குற்றாலம், சண்டையை விரும்பாத சமத்தான சங்கம்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கதானயானாக நடிப்பதாகக் கூறி பத்திரிகைகளுக்கு செய்தி மட்டுமே அளித்துள்ளார். இதுவரை எந்தப் படத்திலும் கதாநாயகனாக நடித்ததில்லை என கூறப்படுகிறது.

இவர் தான் ஒரு அதிமுக பிரமுகர் என அவ்வப்போது வெளிப்படுத்திக் கொள்வார். சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறிய நடிகர் ஆனந்தராஜ் அவர்களை கண்டித்து, நடிகர் ஆனந்தராஜ் வீட்டின் முன்பு சிலருடன் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறி அராஜகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

மோசடி வழக்கு பதிவுசெய்துள்ள நடிகரும் அதிமுக பிரமுகருமான பஷீர் மீது அதிமுக கட்சிரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமா? நடிகர் சங்கம் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளுமா?.

Leave a Response