ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க சென்னை உட்பட பல மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல கட்சித் தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்கள்.
இந்நிலையில் ஜல்லிகட்டுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ் இருவரும் இணைந்து ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த பாடல் சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கொம்பு வச்ச சிங்கம்டா – https://www.youtube.com/watch?v=dAT9md3_Fkk