மும்பை தாக்குதலை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரிஷாவின் ‘1818’

trisha-completes-13-years1தமிழில் முன்னணி நடிகையான த்ரிஷா தற்போது ‘மோகினி’, ‘சதுரங்க வேட்டை’, ’96’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரிதுன் சாகர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘1818’ என பெயரிட்டுள்ளனர். மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும்  இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக இருக்கிறது.

இப்படத்தின் கதாநாயகியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் சுமன், ராஜேந்திரபிரசாத், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ் திலக், ராஜா ராணி படத்தில் நடித்த மிஷா கோஷல் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை மைன்ட் டிராமா நிறுவனம் தயாரிக்கிறது. எஸ்.எஸ்.தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Response