எனிமிக்கு ஏற்பட்ட காயம்

யார் அந்த எனிமினு பார்க்குறீங்களா? நம்ம ஆர்யா தாங்க அந்த எனிமி.

அதாவது விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகும் படம் “எனிமி”. ‘மினி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில்
எஸ்.வினோத்குமார் தயாரிக்கிறார். ஆனந்த்சங்கர் இப்படத்தை இயக்குகிறார். இவர் “அரிமா நம்பி’, “இருமுகன்”, “நோட்டா” உள்ளிட்ட படங்களை இயக்கியவர். கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .

தமன் இசையமைக்க, RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக்காட்சிகளை ரவிவர்மா அமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு தற்போது EVP பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்புகளுடன் நடைபெற்று வருகிறது .

விஷாலுக்கும், ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் டூப் இல்லாமலால் எடுக்கப்பட்டு வந்த நிலையில், படப்பிடிப்பின்போது ஆர்யாவிற்கு கையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சிகிச்சைக்கு பெற்று மீண்டும் நேற்று படப்பிடிப்பில் ஆர்யா கலந்துகொண்டார் .

Leave a Response