ஒரே படத்தில் வடிவேலு, சூரியோட நடித்தது பெருமையா இருக்கு: விஷால்


img_2341சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் கத்திச்சண்டை. விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். நகைச்சுவை வேடத்தில் ’வைகைப்புயல்’ வடிவேலு மற்றும் சூரி நடித்துள்ளனர்.

மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஷால்,

“பத்து வருடங்களுக்குப் பிறகு நானும் வடிவேலு அண்ணனு சேர்ந்து நடிக்கிறதானாலும், நீண்ட நாள் கழிச்சு வடிவேலு அண்ணன் நடிக்கிறதனாலும் சாதரண நாள்ல ரிலீஸ் பண்ண வேணாமென்று தீபாவளியன்று ரிலீஸ் பண்ணலாம் என்று நினைத்தோம். ஆனால் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணமுடியாததால் பொங்களுக்கு ரிலீஸ் பண்ண முடிவு பண்ணியிருந்தோம். பொங்களுக்கு விஜய் படம் வருது, அந்தப் படத்தோடு ரிலீஸ் பண்ணனும்னு நால் நினைக்கவில்லை.

பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸானா விடுமுறை நாட்கள் அதிகமாக கிடைக்கும்.  வடிவேலு அண்ணனின் படத்தை பார்க்க ஏராளமானவர்கள் வருவார்கள்.  அதுனால தான் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால், சிங்கம்-3 படம் டிசம்பர்-23ம் தேதி ரிலீஸாகாததால் இந்த விடுமுறை நாட்களை  ஏன் மிஸ் பண்ணணும்னு இந்த நாள்ல ரிலீஸ் பண்றோம். மற்றப்படி வேற எந்த  எண்ணமும் இல்லை. ஒரே படத்தில் வடிவேலு, சூரியோட நடித்தது எனக்கு  ரொம்ப பெருமையாக இருக்கிறது.” என்று கூறினார்.


 

Leave a Response