எதற்கும் துணிந்தவன் – திரை விமர்சனம்

கருணை இல்லா மனித மிருகங்களால் சூரையாடப்படும் பெண்களை போராடி மீட்கும் நாயகனின் கதை தான் “எதற்கும் துணிந்தவன்”.

நன்றாக வாழும் இரண்டு கிராமங்களில் பெரிய மனிதன் போர்வையில் வலம் வரும் வினய் அவரது இச்சைக்காக ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி பல தவறுகளை செய்கிறார். இதனால் சில உயிர்களும் பறிபோகின்றன. அதை அறியும் நாயகன் சூர்யா, வில்லனை முறியடித்து அப்பாவிகளை எப்படி காக்கிறார் என்பது தான் கதை.

‘ஜெய்பீம்’ படத்திற்கு பிறகு மீண்டும் சமூக நோக்கிலான படம் செய்ததில் கவர்கிறார் சூர்யா. ரசிகர்களுக்கு ஏற்ற மசாலா காமெடியும் கலந்து ஒரு குடும்ப படமாக ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு சூர்யாவுக்கு திரையில் வந்திருக்கும் படம். ரசிகர்களின் மொத்த ஏக்கததையும் போக்கும் வகையில் ஆடல் பாடல் ஆக்சன் காமெடி கருத்து எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்திருக்கிறார். பஞ்ச் வசனம், காமெடி என நடிப்பில் அயன் சூர்யா தெரிகிறார்.

பிரியங்கா ஆரம்பத்தில் தடுமாறினாலும் அடுத்தடுத்த காட்சிகளில் பிக்கப் ஆகி க்யூட் அழகியாக ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவருக்கு வரும் பிரச்சனையை எதிர்கொள்ளும் காட்சியில் அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார்.

வினய் அழகான நாயகனாக வலம் வந்தவர் அதிரடி வில்லனாக கலக்க ஆரம்பிட்திருக்கிறார். அலட்டல் இல்லாத நடிப்பென்றாலும் டாகடர் படத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்துகிறார். சத்யராஜ், சரண்யா நிறைவான நடிப்பில் கவர்கிறார்கள், சூரி புகழ் படத்தில் எதற்கென்றே தெரியவில்லை.

பாண்டிராஜ் கிராமத்து குடும்ப உறவுகளை அழகாக சொல்பவர் இதில் வேறோரு பிரச்சனையை கையிலேடுத்திருக்கிறார். ஆனால் அதில் நாயகனுக்கு காட்சிகள் குடும்ப உறவுகள் பற்றி சொல்கிறேன் என தடம் மாறியதில் தான் பிரச்சனை. அட்டகாசமாக ஆரம்பிக்கும் கதை விறுவிறுப்பாக க்ளைமாக்ஸ் நோக்கி நகராமல் அங்கங்க்கே தடம் மாறுகிறது. அதை சரிசெய்திருந்தால் இன்னும் அழகான படமாக மாறியிருக்கும்

மொத்ததில் பாண்டிராஜ் பாணியில் சூர்யாவுக்கு ஒரு அழகான மாஸ் கமர்ஷியல் படம்

Leave a Response