ஒரே கலைக்குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் நடிக்கும் படம்

ஒரே கலைக்குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் – தாத்தா, மகன், பேரன் என மூவர் நடித்திருக்கின்றனர்.

2 டி என்டேர்டைமென்ட் சார்பில் சூர்யா – ஜோதிகா தயாரிக்கும் படம் ‘ஓ மை டாக்’. சரோவ் சண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார்.

மூன்று தலைமுறைகளைப் பற்றியது. குடும்பப் பாங்கான இப்படத்தில் நிஜத்தில் மூன்று தலைமுறை நடிகர்களான விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் மூன்று கதாபாத்திரங்களான= மூன்று குடும்பங்களின் தலைமுறைகளான கலைக்குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, அப்பா மகன் மூவர், விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அர்னவ் (அறிமுகம்) நெருக்கமான உறவு, அனைவரின் நெஞ்சையள்ளும் விதமாக படமாக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, மஹிமா நம்பியார் மற்றும் வினய் ராய் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி தரும் இந்த படம், ஏப்ரல் 21 அன்று இந்தியாவிலும், 240 உலக நாடுகளிலும் மற்றும் பல பிரதேசங்களிலும் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

இப்படம் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த(தாத்தா, அப்பா, மகன் மூவரின்) மற்றும் நாய்க்குட்டி சிம்பா கதாபாத்திரங்களின் கொண்ட உண்மையான குடும்பப் படம் அனைவரின் இதயங்களையும் கவரும். அமேசான் ஒரிஜினல் பட வரிசையில் ஏப்ரல் 21 அன்று இந்த படம் பிரத்யேகமாக தமிழ், தெலுங்கு மொழிகளிலும் மற்றும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலும் கண்டு மகிழலாம்.

இப்படத்தைப் பற்றி நடிகரும், படத் தயாரிப்பாளரும், 2டி என்டெர்டெய்ன்மென்டின் நிறுவனருமான சூர்யா அவர்கள் பேசுகையில்,

“ஓ மை டாக்- ஒரு மனிதன், அவனுடைய நெருங்கிய நண்பனுக்கிடையே நடக்கும் முக்கியமான மதிப்பு, காதல், நட்பு, அன்பு ஆகியவைகள் உள்ளத்தைத் தொடுமாறு இந்த படம் அமைந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்தினரும், முக்கியமாகக் குழந்தைகளும் சேர்ந்து கண்டுகளிக்க வேண்டிய படம். உணர்வுப் பூர்வமான இந்த படம் தொலை தூரத்திலிள்ள அனைவரும் பிரைம் வீடியோ மூலம் கோடை விடுமுறையில் குழந்தைகளை மகிழ்விக்கும்.” என்றார்.

முன்னணி நடிகரான அருண் விஜய் பேசும் போது,

“ஓ மை டாக்” படம் எனது சொந்த தொழில் மற்றும் அடையாளத்தைத் காட்டும். எனது குடும்பத்தைப் பற்றியும் பல காரணங்களுடன் தொடர்புள்ளது. இப்படத்தின் மூலம் என்னுடைய அப்பா, என் மகன் அர்னவ்வின் ( அறிமுகம்) அப்பாவாக வருவது மட்டுமல்லாமல் நான் ஒரு அப்பாவாகவும் இருப்பதால் என் மனம் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது. அர்னாவின் அப்பாவாக இந்த படத்தின் முக்கியத்துவம், இளம் ரசிகர்களின் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த படம் உண்மையான என்டெர்டெய்னர் மட்டுமின்றி, குழந்தைகள் தம் விஸ்வாசம், அறியாமை மற்றும் பல குணாதிசயங்களை தமக்குள் ஏற்படுத்திக் கொள்ள மிகுந்த சான்றாக அமையும் என நான் கருதுகிறேன்” என்று கூறினார்.

இயக்குநர் சரோவ் சண்முகம் கூறுகையில்,-

“ஓ மை டாக் படம் உணர்ச்சிகள் ததும்பும் ஓர் உன்னதப் படம். இப்படம், குழந்தைகளாக, நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பெரியவர்களாக நாம் வளர்ந்துவிட்ட பிறகு, நமது பல வித பொறுப்புகளினால் மறந்துவிடுவதை அலசுகிறது. இது குழந்தைகள் தங்களின் சக்திவாய்ந்த மனோதிடத்தையும், மதிப்புகளையும் பெரியவர்களுக்கு வழிகாட்டிகளாக அமைகிறது என்பதையும் காட்டுகிறது. விஜயகுமார் ஐயா, அருண் விஜய் மற்றும் அர்னவ் ஆகியோருடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமாக உள்ளது. மூன்று தலைமுறைகள் கொண்ட அந்த நடிகர்களின் திறமையான நடிப்பினை நாம் இதில் காணமுடிகிறது.” என்றார்.

இந்த படத்தை தயாரித்தவர்கள்.. ஜோதிகா-சூர்யா, மற்றும் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் RB டாக்கீஸின் எஸ் ஆர். ரமேஷ் பாபு. இசையமைப்பு நிவாஸ் பிரசன்னா. ஒளிப்பதிவு கோபிநாத் ஆகியோர் செய்துள்ளனர். இப்படம் பிரைம் வீடியோ மற்றும் 2D என்டர்டைன்மென்ட் ஆகிய இருவருக்குமிடையே நான்கு-பிலிம் வியாபாரத்தின் ஒரு பகுதியாகும்.

கதைச் சுருக்கம் :

“ஓ மை டாக்” பார்வையற்ற நாய்க்குட்டி சிம்பா மற்றும் அர்ஜூன் ஆகியோருக்கிடையே நடக்கும் உணர்வு அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. அர்ஜூன் சிம்பாவைக் காப்பாற்றியதின் மூலம் அவருக்கு சொந்தமாகவே ஆகிவிடுகிறது. இந்த படம் அர்ஜூன் மற்றும் சிம்பாவின் நெருக்கடிகள் மற்றும் பல வித சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நகர்ந்து, நம் ஒவ்வொருவரின் இதயத்தையும் சுற்றி வலம் வருகிறது.

Leave a Response