மீண்டும் தமிழில் சோனாக்‌ஷி சின்ஹா


1511பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘லிங்கா’ படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் ரீமேக்கில் சோனாக்‌ஷி சின்ஹா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இப்படத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நயன்தாரா கேரக்டரில் நடிக்க சோனாக்‌ஷி சின்ஹாவிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சோனாக்‌ஷி சின்ஹா இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்றாலும் அவர் நடிக்க ஒப்புக்கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


 

Leave a Response