“செக்க சிவந்த வானம்” விமர்சனம்..!

செக்க சிவந்த வானம் படம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே இப்படத்தின் எதிர்பார்ப்பு சொல்லில் அடங்காதது. ஏனென்றால் இது போல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடிப்பது எப்பொழுதாவது தான் நடக்கும் அது மணிரத்னம் படத்தில் தான் நடக்கும்.

பெரும் விஐபியான பிரகாஷ்ராஜை ஒரு கும்பல கொலை செய்ய முயற்சி செய்வதும் அப்பாவை யார் இப்படி செய்ய அலைவது என மகன்கள் தேட முயற்சி செய்யும் தனது அக்னி நட்சத்திரம்,பகல் நிலவு காலத்து கதாபாத்திரங்களையும் கதையையும் கொஞ்சம் லேசாக தொட்டு உருவி இருக்கும் படம்தான் செக்க சிவந்த வானம்.

மகன்கள் மூன்று பேருக்கும் அப்பாவை கொலை செய்ய முயற்சி செய்வது யார் என ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகம். பெரியவர் இடத்தை யார் பிடிப்பது என்று போட்டியும் கூட. தந்தை பிரகாஷ்ராஜும் ஒரு கட்டத்தில் இறந்து விட அவரை கொல்ல முயற்சி செய்தது யார், பிரகாஷ்ராஜின் இடம் எந்த மகனுக்கு என்பதே படத்தின் மீதிக்கதை.

இசை, ஒளிப்பதிவு, ஸ்டைல், மேனரிசம், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து கடைசி நாள் வந்த போஸ்டர் வரை அனைத்துமே அருமை .

அருண் விஜயும், சிம்புவும் மிக ஸ்டைலிஷாக அழகாக இருக்கிறார்கள் நடிப்பதற்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியான விதத்தில் வெளிப்படுத்தியும் இருக்கிறார்கள்.படத்தில் அதிக ஸ்கோர் செய்வது அரவிந்த்சாமிதான் மணிரத்னத்தின் ஆஸ்தான நாயகன் என்பதால் மணிரத்னத்தில் புரிதலை சிறப்பாக உள்வாங்கி மிக சிறப்பாக நடித்துள்ளார்.

சிம்பு ஸ்டைலாக மட்டுமல்லாமல் எமோஷனலாகவும் நடித்திருக்கிறார். இந்த படம் அவர் கேரியரில் ஒரு பெஸ்ட்தான். இது போல நடிப்பை சிம்பு தொடர்ந்து வெளிப்படுத்தினால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, ரஹ்மானின் இசை, பின்னணி இசை அனைத்தும் அசத்தல் ரகம். ஐஸ்வர்யா ராஜேஸ், அதிதி ராவ் போன்றோரின் நடிப்பும் புதிய ரகம்.

இத்தனை நடிகர்களையும் மணிரத்னம் லெப்ட் ரைட் வாங்கியிருப்பது பெரிய விசயம் பல வருடங்களாக படங்கள் இயக்கி வந்தாலும் காலத்துக்கேற்றவாறு படங்கள் இயக்குவது மணிரத்னத்துக்கு மட்டுமே கை வந்த கலை.

படத்தின் மற்றொரு பலம் விஜய் சேதுபதியின் பாத்திர படைப்பு நல்லவரா கெட்டவரா என்று தெரியாத அளவு இவரின் கதாபாத்திரம் பலமாக படைக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ்ராஜ் மனைவியாக வரும் ஜெயசுதா நடிப்பு மிக அருமை. அதே போல் ஜோதிகாவும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.

இவ்வளவு சிறப்பு இருந்தாலும் மெதுவாக நகரும் வழக்கமான மணிரத்னம் பட காட்சிகள் ரசமாக இருக்கிறது.

Leave a Response