சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த 2 வாலிபர்களின் கைப்பையை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 2 வாலிபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
அத்தோடு பயணிகளின் உடமைகள் வரும் கன்வேயர்பெல்ட் அருகே கேட்பாரற்று சூட்கேஸ் கிடந்தது. சந்தேகம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் அதனை திறந்து பார்த்தனர்.
அதில் 1 கிலோ 300 கிராம் தங்கம் இருந்தது. அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து கடத்தல்காரர்கள தங்கம் இருந்த சூட்கேசை விட்டு சென்றிருப்பது தெரிந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
ஒரே நாள் இரவில் 2½ கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.72 லட்சம் ஆகும்.