கோவை சரளா தான் படத்தோட ஹீரோ: சசிகுமார்


bvt-press-meet-stills-13கிடாரி பட த்திற்குப் பிறகு சசிகுமார் நடித்திருக்கும் படம் பலே வெள்ளயத்தேவா. இப்படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா கதாநாயகியாக நடித்திருக்கிறார். சசிகுமாரின் அம்மாவாக நடிகை ரோகினியும், தாத்தாவாக சங்கிலி முருகனும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பி.சோலை பிராகாஷ் இயக்கியுள்ளார்.

படத்தில் நடித்த சசிகுமார், தான்யா, கோவை சரளா, சங்கிலி முருகன், ரோகினி  படத்தின் இயக்குநர் சோலை பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்ட  பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சசிகுமார்,

“இந்த படத்துல செல்ஃபி காத்தாயிங்கிற கேரக்டரை தமிழ் சினிமாவுல இரண்டு  பேரால தான் பண்ணமுடியும். ஒருத்தர் ஆச்சி மனோரமா, இன்னொருத்தர் சின்ன ஆச்சி கோவை சரளா. அவங்களை சின்ன ஆச்சினு தான் சொல்லணும். ஆச்சி மனோரமா இடத்தை கோவை சரளாவால்  தான் நிரப்ப முடியும். அதுனால தான் இந்த கேரக்டரை அவங்களுக்கு  கொடுத்தோம். அவங்க தான் இந்த படத்துக்கு ஹீரோ, அதுக்கப்பறம் தான் நான். அதே போல் சங்கிலி முருகன் சார்க்கும் முக்கியமான கதாபாத்திரம்.  என்னை வைச்சு படம் தயாரிக்கணும்னு அவர் ஆர்வமா இருந்தார். ஆனால்,  நான் அதுக்கு முன்னாடி அவரை வைச்சு படம் தயாரிச்சுட்டேன். ரொம்ப  எனர்ஜியா இருந்தார். இந்த படம் மூலமா, 50 நாள்ல ஒரு படம் பண்ணலாம்னு  நான் தெரிஞ்சுக்கிட்டேன்.”


 

Leave a Response