விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா


hansika-to-romance-vishnu-vishal-nextஅறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதாநயாகன்’. இப்படத்தில் நாயகியாக கத்ரீன் தெரசா நடித்துள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் முருகானந்தம் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷ்ணு விஷால். இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன், ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்துள்ளனர்.

போகன் படம் ரிலீஸை எதிர்பார்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. இப்படம் வெற்றிபெற்றால் தனக்கு நல்ல வாய்ப்புகள் வரும் என நம்பிக்கையுடன் இருக்கிறார்.

தற்போது முண்டாசுப்பட்டிராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால்.


Leave a Response