”வேலையில்லா பட்டதாரி 2” படப்பிடிப்பை ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்


whatsapp-image-2016-12-15-at-11-20-58-amவேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘வேலையில்லா படட்தாரி’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘வேலையில்லா படட்தாரி 2’ என  உருவாகிறாது. இப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். தாயரிப்பாளர் தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டது. படத்தின் முதல் காட்சியை நடிகர் ரஜினிகாந்த் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தனுஷ், ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, சவுந்தர்யா, தாணு, சரண்யா பொண்வண்ணன், அமலாபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


 

Leave a Response