ரசிகர்களை சம்பாதித்ததில் தான் மகிழ்ச்சி: ஹன்சிகா


hansika-hit-flop-moviesசினிமா பிரபலங்கள் தற்போது பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். போட்டோக்கள், தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் என பலவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள்.

இதனால் ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் ஹன்சிகாவின் பேஸ்புக் பக்கத்தில் 60 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.

இதுபற்றி ஹன்சிகா கூறுகையில்,

”பேஸ்புக்கில் எனக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை தொட்டுள்ளது. ரசிகர்கள் தங்கள் மனதில் எனக்கு இடம் அளித்து இருப்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எவ்வளவு பணம் சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல, எவ்வளவு ரசிகர்களை சம்பாதித்தோம் என்பதில் தான் மகிழ்ச்சி இருக்கிறது. ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் என்னை சின்ன குஷ்பு என்று அழைக்கிறது மகிழ்ச்சி அளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.


 

Leave a Response