வார்தா புயல் பாதிப்பு: நிவாரண பணிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு


vardaahவர்தா புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய உடனடி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.350 கோடி ,  பெரு நகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.75 கோடி , மீனவர் நிவாரண நிதியாக ரூ. 10 கோடி, நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.25 கோடி , நிவாரணப் பணிகளுக்கென காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்களுக்கு தலா ரூ.10 கோடி,  அரசு கட்டடங்களை சீர் செய்ய பொதுப்பணித் துறைக்கு ரூ.7 கோடி,

சுகாதாரத் துறைக்கு ரூ.3 கோடி , பால் பண்ணைகளில் ஏற்பட்ட சேதாரங்களை சீர் செய்ய 50 லட்சம் ,  போக்குவரத்து சமிக்ஞைகளை (டிராபிக் சிக்னல்கள்) சீர் செய்ய காவல் துறைக்கு ரூ.5 கோடி , வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இதர பூங்காக்கள் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளுக்கு வனத்துறைக்கு ரூ.2.5 கோடி , பேருந்துகள் போக்குவரத்துத் துறைக்கு ரூ.2 கோடி  வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response