ஜெயலலிதா சமாதிக்கு நடிகை த்ரிஷா அஞ்சலி


1481431936-6831ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை நடிகை த்ரிஷா அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 6-ஆவது நாளாக இன்றும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த நடிகை திரிஷா மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதா உடலுக்கு  மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.


 

Leave a Response