சினிமா ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் ஜெயலலிதா?

தற்போது கொரோனாவில் உலகமே பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த கொரோனா பாதிப்பால் நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மற்ற தொழில்களை போல், இந்திய சினிமாவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ் சினிமாத்துறை ஊழியர்களும் வருமானமின்றி இருக்கிறார்கள். இந்த நிலை அறிந்த பல சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சினிமாத்துறை ஊழியர்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

சரி, இங்கே எங்கே மறைந்த நடிகையும், முன்னாள் முதல்வருமான காலம் சென்ற ஜெயலலிதா உதவி செய்யப்போகிறார்கள் என்று நீங்கள் யோசிப்பது நன்றாக புரிகிறது. தற்போது ஜெயலலிதா பற்றிய வாழ்க்கை, படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்கு தலைவி என்று பெயரிட்டு விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதா கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கிறார். இவர் தான் தமிழ் சினிமா ஊழியர்களுக்கு உதவும் விதமாக ரூபாய் பத்து லட்சத்தை FEFSI அமைப்பிடம் நன்கொடையாக கொடுக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

Leave a Response