பிரபுதேவா ரீமேக் செய்ய இருக்கும் ராஜமவுலியின் படம்


prabhu-deva-story_647_013116124128பிரபுதேவா இதுவரை 14 படங்கள் இயக்கி இருக்கிறார். இதைத்தொடர்ந்து இரண்டு படங்கள் இயக்க இருக்கிறார். விஷால், கார்த்தி நடிக்கும் புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருக்கும் பிரபுதேவா இந்தியில் புதுபடம் ஒன்றை இயக்க உள்ளார்.

ராஜமவுலி இயக்கிய ’மகதீரா’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். இந்தப் படத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியில் நடிகர் சாஹித் கபூர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மகதீரா படத்தை ரீமேக் செய்ய பலர் முயன்றிருக்கிறார்கள், ஆனால் ராஜமவுலி அனுமதி தரவில்லை. இம்முறை பிரபுதேவா முயற்சி செய்வதால் ரீமேக் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

Leave a Response